இறைஊழியர் லெவேயின் பரிந்துரையால் அற்புதம்

ruby

 

எனது பெயர் அருள் வெண் ரூபி. நான் வேலூர் காந்திநகரில் உள்ள தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். எனது கணவர் பிரான்சிஸ், எனது மகன், எனது மகள் ஆகிய என் குடும்பத்தாரோடு நான் வேலூர் காட்பாடியில் வசித்து வருகிறேன்.

கடந்த மூன்று மாத காலமாக எனக்குத் தொடர்ந்து தீராத நெஞ்சுவலி ஏற்பட்டது.  எனக்கு இதய நோயாக இருக்குமோ என்று மனதுக்குள் பயமாகவே இருந்தது.  எனவே, எனது கணவரிடம் சொல்லி ஜுன் மாதம் 17-ம் தேதி சனிக்கிழமை (17.6.2017) ராணிப்பேட்டை அப்பொல்லோ மருத்துவமனைக்கு பரிசோதனைக்காகச் சென்றேன். முதல் பரிசோதனையில் மருத்துவர்கள் “இரத்தக் குழாயில் அடைப்பு இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே 21.06.2017 அன்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற மருத்துவமனையில் சேருங்கள்” என்று சொல்லி அறிவுறுத்தினார்கள். அதன்படி நான் ஜுன் 21-ஆம் தேதி அப்பொல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக மீண்டும் சென்றேன். பரிசோதனை முடிந்து ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்ட் செய்ய (யுபெழைபசயஅ யனெ யுபெiழிடயளவல) அடுத்தநாளே மருத்துவமனையில் சேரவேண்டும் என்று சொன்னார்கள்.  ரூபாய் 2½ இலட்சம் செலவாகும் என்றும் சொன்னார்கள்.  நாங்கள் அன்றே வீட்டிற்கு வந்துவிட்டோம்.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியைச் சார்ந்த மருத்துவமனையில் (ஊஆஊ) இரண்டாவது பரிசோதனை (ளுநஉழனெ ழுpinழைn) செய்வதற்காக ஜுன் மாதம் 24-ம் தேதி சென்றோம். மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு மீண்டும் ஜுன் 28-ம் தேதி புதனன்று (28.06.2017) பரிசோதனைக்காக வரச்சொன்னார்கள். வுஆவுஇ நுஊர்ழு உட்பட பரிசோதனைகள் செய்து இதயத்தில் இரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதாகவும் மறுநாளே மருத்துவமனையில் சேர்ந்து ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிட்டார்கள். மருத்துவ செலவு ரூபாய் 2½ இலட்சம் ஆகும் என்று (நுளவiஅயவந) எழுதிக் கொடுத்து விட்டார்கள்.

அன்று மாலை 6.00 மணியளவில் என்னுடன் பணி புரியும் ஆசிரியை திருமதி. அக்ஸீலியா மேரியிடம் “நாளை நான் ஊஆஊ மருத்துவமனையில் சேர்ந்து ஆஞ்சியோ கிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்து கொள்ளப் போகிறேன்” என்று சொன்னேன். அவரது கணவர் திரு. ஜோசப் அருனால்ட் என்னிடம், “நீங்கள் இறை ஊழியர் பட்டம் பெற்ற தந்தை லூயி லெவேயிடம் வேண்டிக் கொள்ளுங்கள். நானும் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்.  உங்களுக்கு அதிசயம் நடக்கும். நாளைக்கு ஒன்றும் இல்லை என்று வருவீர்கள். நீங்கள் அவரது புனிதர் பட்டத்திற்கு சாட்சி சொல்வீர்கள். அவரது கல்லறைக்குச் சென்று செபித்த பலர் அற்புதமாகக் குணம் பெற்றிருக்கிறார்கள்” என்று சொன்னார். நானும் எனது கணவரும் தந்தை லெவேயிடம் பக்தியுடன் வேண்டிக் கொண்டோம்.

ஜுன் 29-ம் தேதி வியாழன் காலை 11.00 மணியளவில் வேலூர் ஊஆஊ மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டேன். சுமார் 30 நிமிடத்தில் ஆஞ்சியோ கிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்ட் செய்வதற்காக என்னை அறுவை சிகிச்சை செய்யும் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார்கள். நண்பகல் 12.30 மணியளவில் ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது.  அப்போது திடீரென எனக்கு இதய அடைப்பு வந்தது.  இதயத்துடிப்பு மிகவும் குறைந்தது.  மருத்துவர்கள் எனது இதயப் பகுதியை அழுத்தினார்கள் (Pரஅpiபெ).  அப்போது தான் நான், “லெவே தந்தையே, எனது வேதனையிலிருந்து விடுதலை தாங்க” என்று செபித்தேன்.  சிறிது நேரத்தில் எனது சுவாசம் இயல்பு நிலையை அடைந்தது. மீண்டும் ஆஞ்சியோ கிராம் செய்தார்கள். இதயத்தில் எந்த அடைப்பும் இல்லை. மருத்துவர்கள் அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள். “இது எப்படி?” என்று வியந்தார்கள். “உங்களுக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் தேவையில்லை” என்று வியப்புடன் கூறினார்கள். மேலும் அன்று மாலையே 7.00 மணியளவில் மருத்துவமனையிலிருந்து என்னை னளைஉhயசபந செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

நான் இப்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். எனக்கு இப்போது மூச்சுத்திணறல், ஏப்பம், விக்கல் எதுவும் இல்லை. மாடிப்படிகளிலும் என்னால் எளிதாக ஏற முடிகிறது. நான் ஜுலை 13-ம் தேதியிலிருந்து பள்ளிக்குச் சென்று வழக்கம் போல எனது கல்விப்பணியை ஆற்றுகின்றேன். தந்தை லெவேயைப் பற்றி இதற்கு முன்பாக நான் கேள்விபட்டதே இல்லை. ஆனால் இறை ஊழியர் லெவே அவர்களின் பரிந்துரை வழியாகவே நான் அற்புதகமாகக் குணம் பெற்றுள்ளேன். நானும் என்னுடைய குடும்பத்தாரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு தந்தை லெவே அவர்களின் பரிந்துரைதான் காரணம்.

இறைஊழியர் லூயி லெவே அவர்களுக்குப் புனிதர் பட்டம் கிடைக்க எனக்கு நடைபெற்ற இந்த அதிசயத்தை நான் சாட்சியாகக் கூறுகின்றேன்.

“கடவுளின் செயல் இதுவே.
நம் கண்ணிற்கு வியப்பே”.

என்னுடைய மருத்துவப் பரிசோதனை ஆவணங்களும் இதற்கு சாட்சிகளாக உள்ளன.

இயேசுவுக்குப் புகழ்! இயேசுவுக்கு நன்றி!.

திருமதி. அருள் வெண் ரூபி
தமிழ் பட்டதாரி ஆசிரியை
காட்பாடி , வேலூர்

Cell: 8825457102