Testimony

இறைஊழியர் லெவேயின் பரிந்துரையால் அற்புதம்


ruby

  எனது பெயர் அருள் வெண் ரூபி. நான் வேலூர் காந்திநகரில் உள்ள தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். எனது கணவர் பிரான்சிஸ், எனது மகன், எனது மகள் ஆகிய என் குடும்பத்தாரோடு நான் வேலூர் காட்பாடியில் வசித்து வருகிறேன். கடந்த மூன்று மாத காலமாக எனக்குத் தொடர்ந்து தீராத நெஞ்சுவலி ஏற்பட்டது.  எனக்கு இதய நோயாக இருக்குமோ என்று மனதுக்குள் பயமாகவே இருந்தது...